Enable Javscript for better performance
இளம்பெண் தீக்குளித்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    கடையல் அருகே இளம்பெண் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கடையல் அருகேயுள்ள காட்டாவிளையைச் சேர்ந்தவர் நெல்சன். கூலித் தொழிலாளியான இவரது மகள் சுபியா (23). இவருக்கும் திருவட்டாறு அருகேயுள்ள சாரூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரூபனுக்கும் (28) கடந்த மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்து விருந்துக்கு வந்த சுபியா மீண்டும் கணவரின் வீட்டுக்குச் செல்ல வில்லையாம். இந்நிலையில் சுபியாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவரது பெற்றோர், கடையல் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சுபியாவைத் தங்க வைத்தனராம்.

    இந்நிலையில் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்தில் சுபியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் பாட்டீல் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கடையல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai