Enable Javscript for better performance
கருங்கல் அருகே விபத்து:பொறியியல் மாணவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே விபத்து:பொறியியல் மாணவர் காயம்

    By கருங்கல்,  |   Published on : 28th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருங்கல் அருகே உள்ள நடுத்தேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கார் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் பொறியியல் மாணவர் காயமடைந்தார்.

    பாலப்பள்ளம் அருகே உள்ள சேவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுபின்(22), தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை காரில் கருங்கல்லுக்கு சென்றார்.

    நடுத்தேரி பகுதியில் சென்ற போது கார் சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதி, அருகில் உள்ள காம்பவுன்ட் சுவரிலும் மோதியது. இதில் சுபினுக்கு காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு கருங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கார் மோதியதில் மின்கம்பம் மற்றும் காம்பவுன்ட் சுவர் சேதமடைந்தது. காரின் முன் முன்பகுதியும் சேதமடைந்தது. விபத்து குறித்து கருங்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai