சுடச்சுட

    

    சின்னமுட்டத்தில் இரவு 11 மணிக்குள் படகுகள் கரை திரும்ப வேண்டும்

    By கன்னியாகுமரி,  |   Published on : 28th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சின்னமுட்டத்தில் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இரவு 11 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி-சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வானவில் சகாயம், செயலர் ரெஜீஸ், மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத் தலைவர் செல்வம், சின்னமுட்டம் பங்குப்பேரவை துணைத் தலைவர் தொம்மைசோரீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்று இரவு 11 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். இரவு தங்கு தொழில் செய்யக்கூடாது. கடலில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையை யாராவது வேண்டுமென்றே சேதப்படுத்துவதை நேரில் பார்த்தால் சங்கத்தில் புகார் செய்ய வேண்டும்.

    சேதத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் அபராதத் தொகையினை ஒருவார காலத்துக்குள் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai