சுடச்சுட

  

  சிற்றாறு அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தம்

  By குலசேகரம்  |   Published on : 28th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிற்றாறு அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருநாள்களாக மழை குறைந்ததால் இந்த அணைகளின் மறுகால் மதகுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு மூடப்பட்டன.

  குமரி மாவட்டத்தில் பிரதான அணைகளான சிற்றாறு அணைகளின் தண்ணீர் மூலம் வேர்க்கிளம்பி, கண்ணனூர், முளகுமூடு, பள்ளியாடி, கருங்கல், புதுக்கடை, தேங்காய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பட்டணம் கால்வாய் மூலம் பாசனம் நடைபெறுகிறது.

  கடந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இந்த அணைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மழை இருந்துவரும் நிலையில் சிற்றாறு பட்டணங்கால் பாசனப்பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுக்கும் வகையில் இந்த அணைகளிலிருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் பாசனமதகு வழியாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான காளிமலை, குருசுமலை, நெட்டா, ஆறுகாணி, பத்துகாணி, உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மழையின் தீவிரம் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து கடந்த சில நாள்களாக அதிகமாக இருந்தது. இதையடுத்து இந்த அணைகளில் சராசரியாக 16.50 என்ற அளவில் நீர்மட்டத்தை நிலை நிறுத்தி விட்டு கூடுதலாக வந்த தண்ணீர் சிற்றாறு 1 அணையின் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. இதில் அதிகபட்சம் விநாடிக்கு 300 கனஅடி வரை இரு நாள்களாக வெளியேற்றப்பட்டது.

  இந்நிலையில் மழையின் தீவிரம் குறைந்தால் அணையிலிருந்து உபரியாக தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் பாசனக் கால்வாயில் தொடர்ந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

  தற்போது சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 16.33 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 16.43 அடியாகவும் உள்ளது.

  இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிற்றாறு அணைகள் நிகழாண்டில் நிறைந்துள்ளது. மழையின் தீவிரம் காரணமாக இருநாள்கள் அணையிலிருந்து உபரி தண்ணீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. தற்போது மழை சற்று குறைந்துள்ள நிலையில் மறுகால் மதகுகள் மூடப்பட்டுள்ளன என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai