சுடச்சுட

    

    விளாத்திகுளம் அருகே தத்தனேரியில் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்த கூலித் தொழிலாளி திங்கள்கிழமை இறந்தார்.

    தத்தனேரி, காலனித் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் முருகன் (32). இவரது மனைவி கருப்பாய் (30). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக முருகன், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இவரை உறவினர்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முருகன் திங்கள்கிழமை இறந்தார். இதுகுறித்து, சூரன்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai