சுடச்சுட

  

  பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வி: நவ.1 இல் பிரசாரம்

  By நாகர்கோவில்  |   Published on : 28th October 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

  இதுகுறித்து கல்விக்கான அகில இந்திய போராட்ட பயண தேசிய ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை:

  பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அங்கம் வகிக்கும் கல்வி உரிமைக்கான அகிய இந்திய கூட்டமைப்பு இந்தியா முழுவதும் கல்விக்கான போராட்டப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளது.

  இதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் நவம்பர் 2 ஆம் தேதி போராட்டப் பயணம் தொடங்கி மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் டிசம்பர் 4ஆம் தேதி சங்கமிக்கிறது. அன்றைய தினம் பேரணி, பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபட்டு வரும் கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.

  குமரி மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளின் நினைவாக நவம்பர் 1ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தாய்மொழி வழிக்கல்வியை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வலுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டப் பயணக்குழுவினர் மக்களிடம் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

  மாலையில் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், இந்திய கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் முனைவர் ஹரகோபால், முன்னாள் துணைவேந்தர்கள் முத்துக்குமரன், வசந்திதேவி உள்ளிட்ட கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொள்கின்றனர்.

  நவம்பர் 2 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து அகில இந்திய போராட்டப் பயணத்தின் தொடக்கமாக குமரிக் கல்விச்சுடர் தீபம் நாகர்கோவில் வழியாக பார்வதிபுரத்திற்கு கொண்டுவரப்படும். இப்பயணம் டிசம்பர் 4 ஆம் தேதி போபால் சென்றடையும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai