Enable Javscript for better performance
மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நவ. 5 வரை விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நவ. 5 வரை விண்ணப்பிக்கலாம்

    By நாகர்கோவில்,  |   Published on : 28th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்வாரியம் சார்பில் நடைபெறும் மனுநீதிநாள் முகாமையொட்டி மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நவ. 5ஆம் தேதி வரை மனு அளிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சா.பேர்ள் மெற்றில்டா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின்நுகர்வோர் தங்களது தாழ்வழுத்த மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யவும் மற்றும் குறைகள் இருந்தாலும் மனு நீதிநாள் முகாம் மூலம் எளிய முறையில் தீர்வு காணலாம். இதனடிப்படையில் நாகர்கோவில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நவ. 11 ஆம் தேதியும், தக்கலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நவ. 18 ஆம் தேதியும், குழித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நவ. 25ஆம் தேதியும் மாலை 3 மணிக்கு மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது.

    எனவே மின்நுகர்வோர் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் மனுக்களை நவ. 5 ஆம் தேதிக்குள் மேற்பார்வை பொறியாளர், கன்னியாகுமரி மின் பகிர்மான வட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நாகர்கோவில் என்ற முகவரிக்கு தபால் உறையில் மனுநீதி நாள் பெயர் மாற்ற விண்ணப்பம் என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். நவ.5ஆம் தேதிக்குப் பிறகு அனுப்பப்படும் மனுக்கள் சாராதண மனுவாக ஏற்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இந்த மனுக்கள் மனுநீதி நாளில் பரிசீலிக்க இயலாது.

    எனவே நவ. 5 ஆம் தேதிக்கு முன்பாக பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்துள்ள மின்நுகர்வோர் தங்களது கோட்டத்தில் நடைபெறும் மனு நீதிநாள் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai