சுடச்சுட

  

  வீடு விற்பதாகக் கூறி முன்பணம் ரூ. 6 லட்சத்தை தரமறுத்தவர் கைது

  By சங்கரன்கோவில்  |   Published on : 28th October 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சங்கரன்கோவிலில் வீடு விற்பதற்காக முன் பணம் வாங்கியவர், வீட்டை திரும்ப ஒப்படைக்காமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றியதாக அளித்த புகாரைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

  சங்கரன்கோவில் திருவுடையாபுரம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சண்முகராஜ் (37). இவர் கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள வடக்குமலையடிப்பட்டியைச் சேர்ந்த செல்லையா மகன் குணசேகரனிடம், சங்கரன்கோவிலில் உள்ள அவரது வீட்டை ரூ.12 லட்சத்துக்கு விலை

  பேசி, முன்பணமாக ரூ. 6 லட்சம் கொடுத்தாராம். பணத்தை வாங்கிய குணசேகரன் கடந்த 3 மாதங்களாக வீட்டை எழுதிக் கொடுக்காமலும்,பணத்தைத் திரும்ப ஒப்படைக்காமலும் இருந்தாராம். இதுகுறித்து சண்முகராஜ் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து குணசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai