சுடச்சுட

    

    31 இல் அய்யா வைகுண்டர் தவ வனத்தில் திருநடை திறப்பு விழா

    By கன்னியாகுமரி,  |   Published on : 28th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜாக்கமங்கலம் தென்பால் கடற்கரை அய்யா வைகுண்டர் தவ வனத்தில் திருநடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை (அக். 31) நடைபெற உள்ளது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு முதல் பணிவிடை, காலை 9.30 மணிக்கு திருநடை திறப்பு விழா நடைபெறும். விழாவுக்கு அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகிக்கிறார். கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ கே.டி.பச்சைமால் திறந்துவைக்கிறார். வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் பி.அரிராமகிருஷ்ணன், செயலர் கே.அதிவீரராமபாண்டியன், அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரித் தலைவர் எஸ்.துரைசாமி, சிவந்தி ஆதித்தனார் கல்லூரித் தலைவர் என்.காமராஜ், செயலர் சி.ராஜன், ராஜாக்கமங்கலம் ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை வி.வளவன், பேராசிரியர் ஆர்.தர்மரஜினி, பி.டி.ராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai