Enable Javscript for better performance
ஆசிட் குடித்து மூதாட்டி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மார்த்தாண்டம் அருகே ஆசிட் குடித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

    மார்த்தாண்டம் அருகேயுள்ள நல்லூர் நெடுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (65). இவரது கணவர் வேதமாணிக்கம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர் வலிப்புநோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம். பல மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லையாம். இதனால் சில நாள்களாக வாழ்க்கையில் வெறுப்புற்று மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். இந்நிலையில் அவர் திங்கள்கிழமை மாலையில் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்தாராம். ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணம்மாள் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai