சுடச்சுட

    

    ஆரல்வாய்மொழியில் ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

    By DN  |   Published on : 29th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரல்வாய்மொழியில் ரயில் முன் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

    ஆரல்வாய்மொழி ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரிடம் சடலம் காயத்துடன் கிடந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகர்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு னுப்பி வைத்தனர். இறந்த இளைஞரின் சட்டை பையில் இருந்த செல்போனை எடுத்து அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்தவர் ஆரல்வாய்மொழி வடக்கூரைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பது தெரியவந்தது.  வெல்டிங் வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாள்களாக வேலைக்கு செல்லாமல் மனவேதனையில் இருந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த அனந்தபுரி ரயில் முன் அவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai