Enable Javscript for better performance
களியக்காவிளை பகுதி கோயில்களில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே ஒரே நாளில் இரண்டு கோயில்களில் திருட்டு நடைபெற்றுள்ளது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூர் பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மாலையில் வழக்கமான பூஜைக்குப் பின் கோயில் நடையை அடைத்துவிட்டு பூசாரி சென்றாராம். இரவில் கோயில் அறையை உடைத்து அங்கிருந்த விளக்குகள், காணிக்கைப் பெட்டியை உடைத்து அதிலிருந்த பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனராம். இதே போன்று வன்னியூர் வாசுகி நாகராஜா கோயிலில் இருந்தும் திங்கள்கிழமை இரவில் வெங்கலத்தால் ஆன உருளி, மணி, கிண்டி உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் திருடு போனதாம்.

    மேலும் வன்னியூர் அருகேயுள்ள பரக்குன்று முந்நூற்றிமங்கலம் சாஸ்தா கோயிலிலும்  இரு நாள்களுக்கு முன்பு விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் திருடு போனதாம்.

    இதுகுறித்து, கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai