சுடச்சுட

    

    குமரி: தொடர் மழையால் வேகமாக நிரம்பும் மாம்பழத்துறையாறு அணை

    By DN  |   Published on : 29th October 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் பெய்துவரும் மழையைத் தொடர்ந்து, மாம்பழத்துறையாறு அணை வேகமாக நிரம்புகிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 39.45 அடியும், பெருஞ்சாணி அணை 68.45 அடியையும் எட்டியுள்ளது.

    பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 310 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 727 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீரும், சிற்றாறு 1 அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

    மாம்பழத்துறையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 54.12. தற்போது அணையில் 53.48 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதன்கிழமைக்குள் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்து வரும் முக்கடல் அணை கடந்த ஒரு வாரத்துக்கு முன் நிரம்பி விட்டது. இதனால் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திற்பரப்பில் 46.8 மி.மீ. திருவட்டாறில் 44.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    மேலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பிறகு மழை பெய்யத் தொடங்கியது. நாகர்கோவிலில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கோட்டாறு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் சாக்கடை நீர் மழைத் தண்ணீருடன் கலந்து ஓடியதால், இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசியது.

    விவசாயிகள் நடவு செய்வதற்காக தயார் நிலையில் வைத்துள்ள நாற்றங்கால் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து விவசாயப் பணிகளை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai