சுடச்சுட

    

    குமரி: 2015-16 நிதியாண்டில் முன்னுரிமை கடனாக ரூ. 5,709 கோடி வழங்க வாய்ப்பு

    By DN  |   Published on : 29th October 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் 2015-2016 நிதியாண்டில் ரூ. 5,709.19 கோடி முன்னுரிமை கடன்களாக வங்கிகள் வழங்க வாய்ப்பு உள்ளதாக, நபார்டு செறிவு சார் கடன் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட, முதல் பிரதியை மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மண்டல மேலாளர் என்.எம். சிவசாமி பெற்றுக் கொண்டார்.

    பின் திட்ட அறிக்கை விவரங்களை நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஜெ. மார்டின் பிரகாசம் விளக்கி பேசியது:

    குமரி மாவட்டத்தில் 2015-2016 நிதியாண்டில் பயிர் கடனாக ரூ. 3,320.70 கோடியும், விவசாயம் சார்ந்த மற்ற தொழில்களுக்கு ரூ. 968.28 கோடியும், பண்ணை சாரா தொழில்களுக்கு ரூ. 320.21 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 1,100 கோடி வரை கடன் வழங்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்ட அறிக்கையின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் அடுத்த ஆண்டுக்கான கடன் திட்டங்களைத் தயாரிக்கவேண்டும். முன்னேடி வங்கியான ஐ.ஒ.பி. திட்டங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட கடன் திட்டமாக வெளியிடும்.

    திட்ட அறிக்கையில் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்குதல், கூட்டுக்குழு பொறுப்புக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்குதல், மீன் வளத்தை பெருக்க கடன் உதவி, பண்ணைத் தொழிலை இயந்திரமாக்குதல், நடைமுறையில் உள்ள நீர்ப்பாசன நிலைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai