சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நல எழுத்தாளர் சங்க இலக்கியக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தியாகி கோ. முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் புலவர் சி.பா. அய்யப்பன்பிள்ளை வரவேற்றார். மு. மீராசா அறிக்கை படித்தார்.

  கவிஞர் நக்கீரன் தமிழ்ச் சொத்து என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். மு. குமரிச் செல்வன், சிலம்பு தமிழின் அருங்கலை களஞ்சியம் என்ற பொருளில் பேசினார். ஆய்வுக் களஞ்சியம் ஆசிரியர் முனைவர் எஸ். பத்மநாபன், ஆசிரியர் பொன். மகாதேவன் ஆகியோர் பேசினர். எழுத்தாளர்கள் என்.ஏ. வேலாயுதன், போ. முருகேசன், இரா. சிகாமணி, துணைத் தலைவர் எஸ்.சி. சுகுமாரன், பேராசிரியர் ஈ. தாணுமாலய பெருமாள், செ. பிச்சை, சி. பிறைசூடும் பெருமாள், மு. சங்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அருள்செல்வர் முனைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி விருது பெற்ற பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு பாடுபட்ட தமிழக தியாகிகளுக்கு உதவித் தொகை மற்றும் மருத்துவப் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai