Enable Javscript for better performance
நாகர்கோவிலில் சாலை மறியல்: பெண்கள் உள்ளிட்ட 252 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் சாலை மறியல்: பெண்கள் உள்ளிட்ட 252 பேர் கைது

    By DN  |   Published on : 29th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீட்டுமனை கேட்டு நாகர்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தொழிற்சங்கத்தினர் 252 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தொழிற்சங்க அமைப்பான ஏ.ஐ.சி.சி.டி.யூ சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் அந்தோனிமுத்து தலைமை வகித்தார்.

    பெண்கள் சங்க மாவட்ட பொதுச்செயலர் சுசிலா, மாவட்ட துணைத் தலைவர் சகாயராணி, தொழிற்சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுனன், மாவட்டக்குழு உறுப்பினர் சூசைமரியான், இளைஞர் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், மீன் தொழிலாளர் சங்க நிர்வாகி ஆன்றோ லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிர்வாகிகள் விமலா, யூஜிலி, பொன்பிரேமா, பத்மினி, கணபதி, சந்திரிகா, தங்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    வீடு இல்லாத அனைவருக்கும் 3 சென்ட் வீட்டுமனையுடன் பசுமை வீடு வழங்க வேண்டும்; பார்வதிபுரம் ஆராச்சர் நில வழக்கில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தொடர்ந்த வழக்கில் கவுண்டர் பதிவு செய்து மேல்முறையீடு உரிய முறையில் தாக்கல் செய்ய வேண்டும்; தமிழகத்தில் மதுபான கடைகளை மூட வேண்டும்; கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

    மறியலில் ஈடுபட்டதாக பெண்கள் உள்ளிட்ட 252 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai