சுடச்சுட

    

    நாகர்கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

    By DN  |   Published on : 29th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மாவட்ட செயற்குழுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சோ. சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலர் சந்தோஷ் வரவேற்றார். தென்மண்டல பொறுப்பாளர் தமிழ்நேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    மாவட்ட இளைஞரணித் தலைவர் ராஜசுப்பையா, மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலர் அகமது நயீம், மாவட்ட தொண்டரணி செயலர் கண்ணன், மாவட்டத் தலைவர் ரஞ்ஜித்சிங், துணைத் தலைவர் செந்தில், துணைச் செயலர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    நாகர்கோவிலில் பாதாளச் சாக்கடை திட்டத்தால் மிகவும் பழுதான சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும். தவறினால் நகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

    நவம்பர் 23ஆம் தேதி குமரி மாவட்டத்தில் நடைபெறும் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு வரும் நிறுவனர் தலைவர் வேல்முருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai