சுடச்சுட

    

    பேச்சிப்பாறை காட்டிலிருந்து தவறி வந்த யானைக் குட்டிக்கு சிகிச்சை

    By DN  |   Published on : 29th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேச்சிப்பாறை அருகே காட்டிலிருந்து தவறி வந்த யானைக்குட்டியை கோவையிலிருந்து வந்த மருத்துவக் குழுவினர் மற்றும் வனத் துறை உயர் அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு சிகிச்சை அளித்தனர்.

    பேச்சிப்பாறை அருகே கீழ்சிற்றாறு தொடலிக்காடு பகுதியில் காட்டுப்பகுதியில் தாயிடமிருந்து தவறி வந்த யானைக்குட்டி ஒன்றை வனத் துறையினர் அண்மையில் மீட்டனர்.

    இந்த யானைக் குட்டியை காட்டில் அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியை வனத் துறையினர் செய்து வருகின்றனர். எனினும் வனத் துறையினரின் முயற்சி இழுபறியாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் யானைக்குட்டியின் உடல் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து யானைக்குட்டி தொடர்பாக என்ன முடிவு செய்வது என்று வனத் துறையினர் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    மருத்துவக் குழுவினர் சிகிச்சை: இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கோவையிலிருந்து கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் வந்த மருத்துவக் குழுவினர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் அம்புரோஸ், குமரி மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் மருத்துவக் குழுவினர் யானைக்குட்டிக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதன் பின் மருத்துவர் மனோகரன் கூறியதாவது: யானைக்குட்டி தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இதனை அதன் தாயுடன் சேர்ப்பதே பொருத்தமாக இருக்கும். தற்போது வன ஊழியர்கள் வனப்பகுதிகளில் இதன் தாயைத் தேடி வருகின்றனர்.

    தற்போது காட்டுப்பகுதியில் அரண் அமைத்து அதில் யானைக்குட்டி 4 நாள்கள் விடும் திட்டம் உள்ளது. அத்திட்டம் கைகொடுக்கவில்லையெனில் யானைக்குட்டியை முதுமலை சரணாலயத்தில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai