சுடச்சுட

    

    மணல் கடத்தல் சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நவ. 11ஆம் தேதி தர்னா நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய மாநாடு ஈத்தாமொழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மாநாட்டுக்கு நிர்வாகிகள் எஸ். சிவகோபன், சி. ஆனிடெய்சி, கே. சதாசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் என். அந்தோனி கொடியேற்றினார். கட்சியின் மாவட்டச் செயலர் என். முருகேசன் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். ஒன்றியச் செயலர் என்.எஸ். கண்ணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பின் விவாதம் நடைபெற்றது. புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய செயலராக என்.எஸ். கண்ணன், உறுப்பினர்களாக எஸ். சிவகோபன், கே.பி. பெருமாள், எம். ஷாகுல் ஹமீது, ராஜகுமார், கே. அலெக்சாண்டர், சி. ஆனிடெய்சி, எம். ரெகுபதி, எஸ். தங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்ட்டனர்.

    மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. மாதவன் மாநாட்டை நிறைவு செய்து வைத்தார்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  மணல் கடத்தல் சம்பவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 11-11-2014 அன்று ராஜாக்கமங்கலத்தில் தர்னா நடத்த வேண்டும்.

    ஈத்தாமொழியில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் கயிறு ஆலையை நவீனப்படுத்தவேண்டும். ராஜாக்கமங்கலம் துறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும்.

    பார்வதிபுரத்தில் ரயில் நிலையம், ராஜாக்கமங்கலத்தில் தீயணைப்பு நிலையம், தெங்கம்புதூரில் காவல் நிலையம், புத்தளத்தில் நூல் நிலையம் அமைக்க அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai