சுடச்சுட

    

    மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க ஆட்சியர் உத்தரவு

    By DN  |   Published on : 29th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழையின் காரணமாக நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனே சரி செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் உத்தரவிட்டுள்ளார்.

    நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் மழையினால் சேதமடைந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒழுகினசேரி, வடசேரி, செட்டிகுளம் சந்திப்பு, வெட்டுர்ணிமடம் சந்திப்பு, எம்.எஸ். ரோடு, கோட்டாறு, ராஜாக்கமங்கலம் ரோடு, நாகராஜா கோயில் ரதவீதிகள், வடிவீஸ்வரம் ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்டார். பின் மழை நீர் வடிகால்களில் அடைப்புகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    மேலும் சேதமடைந்துள்ள பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் பணி மேற்கொள்வதையும்,  சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் உடனிருந்து அவர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தெரு கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றுவதை கண்காணிக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.

    நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி, அதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் வராமல் தடுக்க, அந்தந்த பகுதி துப்புரவு ஆய்வாளர் தலைமையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மழைநீர் தேங்கியிருத்தாலோ, வடிகால்களில் அடைப்புகள் இருந்தாலோ பொதுமக்கள் 04652-230984, 04652-230985, 04652-225616 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு நகராட்சி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai