Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பால் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் புதன்கிழமை (அக். 29) ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

    நாகர்கோவிலில் இக்கட்சியின் வட்டார மையக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு நிர்வாகி மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். வட்டாரக் குழுச் செயலாளர் அந்தோனி, வட்டாரக்குழு உறுப்பினர்கள் பால், எம். லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    பால் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் அக்டோபர் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai