சுடச்சுட

  

  மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திய 1,300 லி. மண்ணெண்ணெய் பறிமுதல்

  By DN  |   Published on : 29th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மார்த்தாண்டம் அருகே மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,300 லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

  கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தொலையாவட்டம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினி லாரியை அதிகாரிகள் பின்தொடர்ந்து துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். அதில் 35 பிளாஸ்டிக் கேன்களில் மொத்தம் 1,300 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும், விசாரணையில், மீனவர்களின் விசைப் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் என்பதும் தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் சின்னத்துறை மண்ணெண்ணெய் விற்பனை மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai