Enable Javscript for better performance
விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி குமரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி குமரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தர்னா

    By DN  |   Published on : 29th October 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரியில் 2 மற்றும் 3ஆம் ஆண்டு படித்து வரும் 93 மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் சுபாஷ் தலைமையில் , செயலர் வளர்மதி, துணைச் செயலர்கள் அருண், ரம்யா ஆகியோர் முன்னிலையில்,  மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் கவன ஈர்ப்பு தர்னாவில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளுக்குச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai