சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.

    நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் என். தளவாய்சுந்தரம் தலைமை வகித்து பேசியது: வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல், திருத்தங்கள் செய்தல் உள்ளிட்ட பணிகளை நவம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில், கே.டி.பச்சைமால் எம்.எல்.ஏ., சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ், அவைத் தலைவர் சதாசிவம், இணைச் செயலர் பாக்கியலட்சுமி, ஒன்றியச் செயலர்கள் பா.தம்பிதங்கம், கே.சி.யு.மணி, டி.ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் எம். சேவியர் மனோகரன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் பாலஜனாதிபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ்.சாரதாமணி, மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலர் இ.என்.சங்கர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் லட்சுமணன், மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ்.ஏ.கீதாஷிவானி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலர் லதா ராமசந்திரன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச்செயலர் செல்லம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai