சுடச்சுட

    

    சின்னமுட்டத்தைச் சேர்ந்த மீனவர் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வள்ளத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

    கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்குச் சொந்தமான வள்ளத்தில் அதே ஊரைச் சேர்ந்த சேவியர் அசோக் (46), சுரேஷ், அந்தோனி ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். சுமார் 7 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சேவியர் அசோக் எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்தார்.

    ஒருமணி நேரமாக கடலுக்குள் தத்தளித்த அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai