சுடச்சுட

    

    குமரி மாவட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

    By நாகர்கோவில்/தக்கலை  |   Published on : 30th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற குமாரகோவில் குமாரசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் புதன்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

    கந்த சஷ்டி திருவிழா கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.

    நாகர்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். நிறைவாக மாலை 6.30மணிக்கு நாகராஜா திடலில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் திரளாக விழாவில் பங்கேற்றனர். இதைபோல் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மாலை 3.30 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார்.

    பின் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும் மருங்கூர்-இரவிபுதூர் ஆபத்துக்காத்த அம்மன் சிங்க வாகனத்திலும் பவனி வருதல் நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    குமாரகோவில்: வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் இத்திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு குமாரசுவாமிக்கு காலை 4 மணிக்கு நிர்மால்ய பூஜையும், உஷ பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரை அகண்ட நாம பூஜை நடைபெற்றது.

    பகல் 11 மணிக்கு சுவாமிக்கு தேன் இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சூரசம்ஹாரத்துக்கு சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெற்றது. பின்னர் அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். கந்த சஷ்டியின் போது 6 நாள் விரதம் இருந்தவர்கள் குமாரகோவில் பெரிய குளத்தில் நீராடி குமாரசுவாமியை வழிபட்டு தங்கள் விரதத்தை முடித்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை மேலாளர் சிவகுமார் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். சூரசம்ஹார நிகழ்ச்சியை காண திங்கள்நகர், இரணியல், இரணியல்கோணம் தக்கலை கல்குறிச்சி, வில்லுக்குறி, காரவிளை, திருவிடைக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான மக்கள் திரண்டனர்.

    வெள்ளிமலையில் சூரசம்ஹாரம்: அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 3 நாள்களாக கந்தபுராண தொடர்விரிவுரையை வெள்ளிமலை சிவா வழங்கினார். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சமய மாநாடு மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில், வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், மற்றும் ஸ்ரீமத் சுவாமி கருணானந்தஜி மகராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் எஸ்.ஜீவானந்தம், மேலாளர் முத்தமிழ் செல்வன், ஆலய முன்னேற்ற சங்க கௌரவ தலைவர் ப.குற்றாலம்பிள்ளை, தலைவர் எஸ்.ராஜரெத்தினம், பொதுச் செயலர் சி. ராஜகோபால், பொருளர் மோகனனன் தம்பி, உதவி தலைவர் குமரேசன், செயலர் ராமசந்திரன், சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள், ஊர்தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதுபோல் களியங்காடு சிவபுரம் சிவன்கோயிலில் உள்ள அருள்மிகு பாலமுருகன் கோயிலிலும், பத்மநாபபுரம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி: தேரிவிளை ஸ்ரீமுருகன் கோயிலில் 29 ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் சிறப்பு வழிபாடு, தீபாராதனை, சமயஉரை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, பிற்பகல் 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு கோயில் வளாகத்தில் இருந்து சூரன் ஊர்வலம் தொடங்கியது.

    பழத்தோட்டம், சுவாமிநாதபுரம், விவேகானந்தபுரம் வழியாக மாலை 6 மணிக்கு வேல்முருகன் குன்றத்தை ஊர்வலம் அடைந்த போது பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து,சுவாமியை தரிசனம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai