சுடச்சுட

  

  கொட்டாரத்தில் ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு

  By கன்னியாகுமரி,  |   Published on : 30th October 2014 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் ஒரே நாளில் 4 கடைகளில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக புதன்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

  கொட்டாரம் கல்லூரி சாலையில் முகிலன்குடியிருப்பைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ஜி.என்.பாலமுருகன் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு இவரது கடையின் பூட்டை உடைத்த திருடர்கள் அங்கிருந்த ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரீ-சார்ஜ் கூப்பன்களை திருடிச் சென்றனர்.

  அதே வரிசையில் உள்ள தென்தாமரைகுளத்தைச் சேர்ந்த காட்லின் என்பவரது கடையின் பூட்டை உடைத்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள ரீ-சார்ஜ் கூப்பன்கள், கொட்டாரத்தைச் சேர்ந்த செல்லப்பா என்பவரது கடையை உடைத்து வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை, ரூ. 200, ஏடிஎம் கார்டு ஆகிவற்றை திருடிச் சென்றனர். மேலும் புவியூரைச் சேர்ந்த பெரியநாடார் என்பவரின் பழக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 300 மற்றும் சிகரெட் பாக்கெட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

  இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai