சுடச்சுட

    

    தாயிடமிருந்து தவறி வந்த யானைக்குட்டி காட்டில் விடப்பட்டு கண்காணிப்பு

    By குலசேகரம்  |   Published on : 30th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேச்சிப்பாறை அருகே காட்டிலிருந்து தவறி வந்த யானைக் குட்டியை வனத் துறையினர் புதன்கிழமை காட்டில் விட்டு கண்காணித்து வருகின்றனர்.

    பேச்சிப்பாறை அருகே தொடலிக்காடு வனப் பகுதியில் தாயிடமிருந்து தவறி வந்த யானைக்குட்டி ஒன்றை வனத்துறையினர் கடந்த வியாழக்கிழமை மீட்டு பராமரித்து வந்தனர்.

    இந்நிலையில் இந்த யானைக்குட்டியை, அதன் தாயுடன் சேரும் வகையில் புதன்கிழமை காட்டில் கொண்டு விட்டனர். இதில், மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன், களியல் வனச்சரக அலுவலர் அபிலீஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் காட்டுக்குள் சென்றனர்.

    இதுகுறித்து வன அலுவலர் ஒருவர் கூறியதாவது:

    காட்டிலிருந்து மீட்கப்பட்ட யானைக்குட்டியை கடந்த ஒரு வாரமாக உணவு கொடுத்து பாரமரித்து வந்தோம். இந்த யானைக்குட்டியை அதன் தாயுடன் சேர்க்கும் வகையில் தற்போது காட்டில் குறிப்பிட்ட இடத்தில் விட்டுள்ளோம். மேலும் யானைக்குட்டி அதன் தாயுடன் சேரும் வரை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு நடத்தப்படும். யானைக்குட்டி காட்டில் விடப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் வெளிநபர்கள் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai