சுடச்சுட

  

  பால் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By நாகர்கோவில்,  |   Published on : 30th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பால் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரக் குழு உறுப்பினர் பால் தலைமை வகித்தார். வட்டாரக் குழுச் செயலர் அந்தோனி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்டச் செயலர் என். முருகேசன் கோரிக்கைகள் குறித்து விளக்கினார். நிர்வாகிகள் செல்லப்பன், மீனாட்சிசுந்தரம், ராமசந்திரன், லட்சுமி, கலா, செல்வகணபதி, அஜிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவின் பால் பாக்கெட்களில் பாலுக்கு பதில் தண்ணீரை நிரப்பி, விலை உயர்வால் இனி தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் மின்கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்திருப்பதற்கும் ஆர்ப்பாட்டத்தில் கண்டித்து பேசப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai