சுடச்சுட

    

    முறைகேடுகளை கண்டித்து பூதப்பாண்டி பொதுப்பணித் துறை அலுவலகம் முன் புதன்கிழமை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பூதப்பாண்டி பேரூர் பாஜக சார்பில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக கேந்திர தலைவர் விஜய் மணியன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் முருகன், நிர்வாகிகள் முத்துகுமார், ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட பொதுச்செயலர் சொக்கலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஒன்றிய பொதுச்செயலர்கள் மகாதேவன் பிள்ளை, மணி சுவாமிகள், மாவட்ட வர்த்தக அணி தலைவர் முத்துராமன், வரவேற்புக்குழுத் தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பூதப்பாண்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், வம்பாறு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai