Enable Javscript for better performance
மூதாட்டியிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரம் அருகே மூதாட்டியிடம் புதன்கிழமை தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    மாச்சக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது சகோதரி எமலி (57). திருமணமாகாத இவர், செல்லப்பனின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறார். புதன்கிழமை மாலை இவர் வீட்டின் அருகே ஆற்றில் குளிக்கச் சென்றாராம். அப்போது ஆற்றுப்பகுதிக்கு செல்லும் வழியில் மறைந்திருந்த மர்ம நபர் எமிலியின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டாராம். இதுகுறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai