சுடச்சுட

  

  கன்னியாகுமரி அருகே விஷம் குடித்து இளைஞர் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

  கன்னியாகுமரியை அடுத்த விஜயநகரியைச் சேர்ந்தவர் சு. பாண்டியன் (32). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

  இந்நிலையில் தங்களை திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை என அப்பெண் பாண்டியனிடம் செல்போன் மூலம் தெரிவித்தாராம். இதனால் மனமுடைந்த பாண்டியன் வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai