கருங்கல்லில் இன்று அரசு சிறப்பு மருத்துவ முகாம்
By கருங்கல், | Published on : 31st October 2014 11:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கருங்கல் அருகே உள்ள துண்டத்துவிளை புனித அந்தோனியார் உயர் நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (அக்.31) தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், காசநோய் பரிசோதனை, இதயநோய் பரிசோதனை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம், தோல் நோய், மனநல மருத்துவம் ஆகியவற்றுக்கு சிறப்பு மருத்துவர்களால் நோய் கண்டறியப்பட்டு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும்.
மேலும், ஆய்வக பரிசோதனை பிரிவில் ரத்தம், சிறுநீர், சளி பரிசோதனைகளும், ரத்தத்தில் சர்க்கரைஅளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் இம்முகாமில் பங்கேற்று சிகிச்சை அளிக்கின்றனர். அறுவை சிசிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்தத் திட்டத்தில் தேர்வு செய்து பின்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முகாம் ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத் துறையினர் செய்து வருகின்றனர்.