சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே  சாலை ஒப்பந்ததாரர் வீட்டில்  கேரள போலீஸார் சோதனை

    By  களியக்காவிளை  |   Published on : 31st October 2014 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் கேரள போலீஸார் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     களியக்காவிளை அருகேயுள்ள பளுகல் கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்தவர் ஒப்பந்ததாரர் மணிகண்டன். இவர், உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார். இவர் மீது கார் வாங்கியது தொடர்பான வழக்கு ஒன்று கேரள மாநிலம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாம்.
     இந்த வழக்கில் மணிகண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாததையடுத்து நீதிமன்றம் அண்மையில் இவருக்கு பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டதாம். இதையடுத்து கேரள மாநில போலீஸார் வியாழக்கிழமை கண்ணுமாமூடுவில் உள்ள மணிகண்டனின் வீட்டுக்கு வந்து சோதனையிட்டனர்.
     இவர், கேரள மாநிலம் பரவூர் பகுதியைச் சேர்ந்த மாணவியை குமரி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு ஒப்பந்தம் வாங்க பாலியல்ரீதியாகப் பயன்படுத்தியதாகவும் மணிகண்டன் உள்பட 65 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள வழக்கு 2011 ஆம் ஆண்டு கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
     இந்நிலையில் மணிகண்டனின் வீட்டில் கேரள போலீஸார் வியாழக்கிழமை சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai