சுடச்சுட

    

    கார் மூலம் நாடு முழுவதும்  23 நாளில் 18,200 கி.மீ. பயணம்:  புதிய முயற்சியை குமரியில்  தொடங்கினார் மகாராஷ்டிர மருத்துவர்

    By  கன்னியாகுமரி,  |   Published on : 31st October 2014 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரியிலிருந்து கார் மூலம் இந்தியா முழுவதும் 18 ஆயிரத்து 200 கி.மீ. சாதனைப் பயணத்தை மகாராஷ்டிர மாநிலம் ஜலகோன் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சவுத்ரி (53) வியாழக்கிழமை தொடங்கினார்.
     இவர் ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு 3,847 கி.மீ. தொலைவை 6 நாள்கள் 5 மணி 25 நிமிடங்களில் கடந்து லிம்கா சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தனது அடுத்த சாதனை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார். இந்தியாவின் 4 முனைகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ள அவர் 23 நாள்களில் முடிக்கவும், நாளொன்றுக்கு 850 கி.மீ. பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
     கன்னியாகுமரியில் இப் பயணத்தை ஹோட்டல் சிங்கார் இன்டர்நேஷனல் பொது மேலாளர் வில்சன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். சென்னை, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், குவகாத்தி வழியாக அருணாச்சல பிரதேசம், பிகார், தில்லி, காஷ்மீர் செல்கிறார். அங்கிருந்து குஜராத் வழியாக பயணத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்கிறார்.
     பயணம் குறித்து மருத்துவர் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: லிம்கா சாதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதால் இப் பயணம் துணிச்சலைத் தந்துள்ளது. இதற்காக எனது காரை தயார் நிலையில் வைத்துள்ளேன். இந்தியாவின் 4 முனைகளுக்கும் செல்லும் பாதையின் விவரத்தை தெளிவாக தெரிந்து வைத்துள்ளேன். பயணத்தில் நான் மட்டுமே தனியாகச் செல்கிறேன் என்றார் அவர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai