சுடச்சுட

  

  குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா:  அமைச்சர் பங்கேற்கிறார்

  By  நாகர்கோவில்,  |   Published on : 31st October 2014 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் விழாவில் அமைச்சர் பங்கேற்கிறார் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து அதிமுக கிழக்கு மாவட்டச் செயலர் என். தளவாய்சுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
   குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள நேசமணி சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார்.
   இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai