சுடச்சுட

  

  குலசேகரம் சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை அகற்றினர்.
   குலசேகரம் சந்தை சந்திப்பில் பேரூராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் கடை நடத்தும் வணிகர்கள் மற்றும் சந்தையின் உள்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் உள்ளிட்டவற்றை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
   இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜமணி (பொறுப்பு) தலைமையில், பேரூராட்சி ஊழியர்கள் சந்தை சந்திப்பு வணிக வளாக கடைகள் மற்றும் சந்தையின் உள் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
   ஆக்கிரமிப்பின் போது பாரபட்சம் காட்டப்பட்டதாக வணிகர்கள் சிலர் பேரூராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அவர்களை கலைந்து செல்ல செய்தனர்.
   இந்நிலையில் குலசேகரம் கல்லடிமாமூடு சந்திப்பு முதல் கான்வென்ட் சந்திப்பு வரை சாலையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டுமெனவும், சந்தை வணிக வளாகக் கடைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை அகற்ற வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai