Enable Javscript for better performance
கோயிலில் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கடை அருகே தொழிக்கொடு பகுதியில் உள்ள அம்மன் கோயில் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
     தொழிக்கோடு பண்டாரவிளையில் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் உள்ளது. இங்கு காலை, மாலை பூஜை நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1.5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடிவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து புதுக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai