சுடச்சுட

    

    சாலையோர பள்ளத்தில்  சிக்கிய அரசுப் பேருந்து:  போக்குவரத்து பாதிப்பு

    By  நாகர்கோவில்,  |   Published on : 31st October 2014 11:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கியதால் அப்பகுதியில் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     கடுக்கரையிலிருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்து சென்றபோது, நாகர்கோவில் மணிமேடை அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கியது. பேருந்தை உடனடியாக மீட்க முடிய வில்லை. இதனால் பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றனர். சாலையில் பேருந்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துப் போலீஸார் அவ்வழியே வந்த வாகனங்களை எஸ்.பி. அலுவலகம், மீனாட்சிபுரம் வழியாக பேருந்து நிலையத்துக்கு திருப்பி விட்டனர். பின் வெகு நேரத்துக்குப் பின் பேருந்து மீட்கப்பட்டது. சாலையோர பள்ளத்தை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai