சுடச்சுட

    

    நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறை புனித யூதா ததேயு பாதுகாவலர் திருவிழாவில், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் பங்கேற்று திருப்பலி நடத்தினார்.
     இந்த தேவாலய பாதுகாவலர் திருவிழா அக். 19 ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. விழாவில் தினமும் மாலையில் ஜெபமாலை மற்றும் ஆசீர்வாதத்துடன் திருப்பலி நடைபெற்றது. விழா நிறைவு நாளன்று பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
     முன்னதாக விழாவுக்கு வந்த ஆயரை சிறுமியர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சின்னத்துறை பங்குத்தந்தை முன்னிலை வகித்தார். தூத்தூர் பங்குத்தந்தை பெபின்சன் அடிகளார், வினோத்அடிகளார் மற்றும் குருக்கள், அருள்சகோதரிகள் பங்கேற்றனர். திருப்பலி முடிவில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கும், பொதுஅறிவு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் ஆயர் ஜூடு பால்ராஜ் பரிசுகளை வழங்கினார். முன்னதாக விநாடி-வினா போட்டிகளை மனிதவள பயிற்சியாளர் பி. ஜஸ்டின் ஆன்டணி நடத்தினார். தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடைபெற்றது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai