Enable Javscript for better performance
\\\"சூழியல் பாதுகாப்பு வளையம்: மத்திய, மாநில அரசுகளிடம் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சூழியல் பாதுகாப்பு வளையம்: மத்திய, மாநில அரசுகளிடம் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும்'

    By  குலசேகரம்,  |   Published on : 31st October 2014 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் தனியார் விவசாயிகளின் பட்டா நிலங்களை சூழியல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவருவது தொடர்பான பிரச்னைக்கு மத்திய வனத்துறை அமைச்சரிடமும் மற்றும் மாநில அரசிடமும் பேசி முடிவு காணப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
     இதுகுறித்து குலசேகரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
     குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வது மற்றும் மலையோரப் பகுதிகளில் தனியார் விவசாயிகளின் நிலங்களை உள்ளடக்கி சூழியல் பாதுகாப்பு வளையம் அமைக்கப்படவிருப்பது தொடர்பான பிரச்னை குறித்து குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் என்னிடம் முறையிட்டன. பிற மாவட்டங்களைப்போல் இல்லாமல் குமரி மாவட்டம் பரப்பளவில் சிறிய மாவட்டம். மட்டுமல்லாது அதிக அளவு காடுகளைக் கொண்ட மாவட்டம். இயற்கை வளங்களை, வன விலங்குகளை, பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது நமது கடமை.
     அதேவேளையில் மக்களின் குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதராங்களை பறிப்பதும், அழிப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
     இப்பிரச்னைகள் தொடர்பாக மத்திய வனத் துறை அமைச்சர் மற்றும் மாநில அரசின் அமைச்சர்களோடு பேசி நிரந்தர தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடவுள்ளேன். இதற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.
     ரப்பர் விவசாயிகள் சங்கம் மனு அளிப்பு: முன்னதாக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ். நெல்சன், செயலர் சி.பாலசந்திரன் நாயர் உள்ளிட்டோர் சூழியல் பாதுகாப்பு வளையம் மற்றும் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான கோரிக்கை மனு அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai