சுடச்சுட

  

  குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் மழை அதிகளவில் பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
   திற்பரப்பு அருவி வழியே பாயும் கோதையாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. மேலும், சிற்றாறு அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரும் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியே பாய்கிறது.
   இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவி அருகில் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியவில்லை. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீடிக்கிறது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai