சுடச்சுட

    

    நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்த தான விழாவில் அதிகமுறை ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
     நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண், அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பேசியது: மாவட்டத்தில் அதிகளவில் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2014 செப்டம்பர்வரை 5,529 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் தேவையான ரத்தம் இருப்பு வைக்க வேண்டும் என்றார்.
     விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசிங், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மதுசூதனன் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மாவட்ட மேலாளர் ஸ்டெல்லா ஜெனட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     அதிக முறை ரத்த தானம் செய்த 89 பேருக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார். மேலும், 44 முறை ரத்த தானம் செய்த நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் பாதுகாப்பு மைய இயக்குநர் அருள்கண்ணனை பாராட்டி ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai