சுடச்சுட

  

  நவ. 2 இல் வாக்காளர்  பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி சிறப்பு முகாம்

  By  நாகர்கோவில்,  |   Published on : 31st October 2014 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) நடைபெறுகிறது.
   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் அக். 15 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) மாவட்டத்தில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
   1.1.2015 அன்று 18 வயது பூர்த்தி செய்யும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8 மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ள படிவம் 8 ஏ விண்ணப்பங்கள் அளிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai