சுடச்சுட

    

    நான்குனேரி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் இறந்தார்.
     நான்குனேரி சுங்கச்சாவடி அருகே விபத்தில் பழுதடைந்து நின்ற லாரி மீது, மற்றொரு லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநர் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை வடசேரியைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் ஜஸ்டின்ராஜ் (32) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே இறந்தார். பலத்த காயமடைந்த லாரி கிளீனர் சிதறால் மலைக்கோயில் அருகே உள்ள கொச்சிப்பாலம் விளையைச் சேர்ந்த செல்வகுமார் (43), ஆனைவிளை ரவி மகன் அனீஸ் (22) ஆகியோர் நான்குனேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai