Enable Javscript for better performance
ஆந்திர சம்பவம்: தக்கலையில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர சம்பவம்: தக்கலையில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    By தக்கலை  |   Published on : 17th April 2015 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர சம்பவத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறலைக் கண்டித்து தக்கலையில் ஒன்றிய அளவிலான அனைத்துக் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அனைத்துக் கட்சி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ப.சகாயதாசு தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் சி.ஏசுதாசன், ரவிகுமார் மற்றும் புரோடிமில்லர், ராஜேந்திரன், இயேசுபக்தன், கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மதச்சார்பற்ற ஜனதா தள மாவட்டத் தலைவர் டி.அருள்ராஜ், வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் டி.சி.ஜோசப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் சைமன்சைலஸ், தமுமுக மாவட்டச் செயலர் அன்வர் உசேன், மதிமுக ஒன்றியச் செயலர் ஜே.பி.சிங், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் எம்.செய்யதலி, பத்மநாபபுரம் திமுக நகரச் செயலர் கி.மணி, தேமுதிக ஒன்றியச் செயலர்  சி.செல்வின், மாவட்ட தலித் கூட்டமைப்புத் தலைவர் பி.பால்ராஜ், நாஞ்சில் பால் பதனிடும் நிலைய இயக்குநர்  மரியராஜேந்திரன், இணை இயக்குநர் ஜோஸ்ராபின்சன்,  முளகுமூடு வட்டார நல்வாழ்வு பணிக்குழுத் தலைவர் சூசைமரியான், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செய்தி தொடர்பாளர் மேசியா, ம.ம.க. மாவட்ட பொறுப்பாளர் எம்.உவேஷ், ரமேஷ்பாபு, சமூக சேவகர்  சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.  

    ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும்; மரக்கடத்தலுக்குப் பின்னால் உள்ள தொழிலதிபர்கள், ஆந்திர அரசியல் பிரமுகர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.   

    முளகுமூடு வட்டார அருள்பணி பேரவை துணைத் தலைவர் சிலம்பை டென்னிசன் வரவேற்றார். பொருளாளர் ஜஸ்டஸ்றோக் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai