Enable Javscript for better performance
\\\"காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு பயிற்சி முகாமில் பங்கேற்கலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு பயிற்சி முகாமில் பங்கேற்கலாம்'

    By நாகர்கோவில்  |   Published on : 17th April 2015 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு, நாகர்கோவிலில் நடைபெற்று வரும் இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் க.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக இலவசப் பயிற்சி வகுப்புகள் ஏப். 15 ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.

    இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப நகல், வேலைவாய்ப்புப் புதிவு அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப். 22 ஆம் தேதிக்குள் நேரில் வந்து பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இதில், ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai