Enable Javscript for better performance
குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் முற்றுகை

    By களியக்காவிளை  |   Published on : 17th April 2015 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழித்துறை நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனக் கூறி நகராட்சி ஆணையரைக் கண்டித்து அரசு பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குழித்துறை நகராட்சிப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ஒன்றரை மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யப்படவில்லையாம். 17 பணிகள் செய்யப்பட்ட வகையில் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் பணம் வழங்க வேண்டியுள்ளதாம். பணிகள் நிறைவடைந்து, நகராட்சி அதிகாரிகளால் அளவீடு செய்யப்பட்டு நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டும் ஒன்றரை மாதங்களாக ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லையாம்.

    இதைக் கண்டித்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கோபகுமார் தலைமையில், செயலர் ஜஸ்டின்குமார், துணைத் தலைவர் கே. தேவராஜ், எஸ். செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது நகராட்சி ஆணையர் அங்கு இல்லாததால், நகராட்சி ஆணையரிடம் முறையிட காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர்கள் நீண்ட நேரமாக அங்கு காத்திருந்தும் ஆணையர் வரவில்லை. இதையடுத்து ஆணையருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர்கள் பிரேம்குமார், கிறிஸ்துராஜ், சேம்பிரைட்ராஜ் உள்ளிட்ட பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai