Enable Javscript for better performance
நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

    By நாகர்கோவில்  |   Published on : 17th April 2015 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்; ஊதியக் குழுவின் அறிவிப்புப்படி ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும்; காலியாக உள்ள சத்துணவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

    ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஏப். 17) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai