Enable Javscript for better performance
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞர்களை பிடித்த பொதுமக்கள்- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞர்களை பிடித்த பொதுமக்கள்

    By குலசேகரம்  |   Published on : 17th April 2015 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுருளகோடு அருகே வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    சுருளகோடு வெட்டுத் திருத்தி கோணத்தைச் சேர்ந்த சுந்தரதாஸ் மனைவி விஜிலா (28). இவர், வியாழக்கிழமை வீட்டில் இருந்த போது, இரு இளைஞர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனராம். விஜிலா தண்ணீர் கொடுக்கும் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை அவர்கள் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். அப்போது விஜிலா சப்தம் போட்டதையடுத்து அப்பகுதியில் நின்றவர்கள் அந்த இளைஞர்களைத் துரத்தியுள்ளனர். சுருளகோடு பாலம் பகுதியில் சென்ற போது இளைஞர்களின் செல்லிடப்பேசி கீழே விழுந்துள்ளது. இதை எடுக்க அவர்கள் திரும்ப வந்த போது  பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து நகையை மீட்டதோடு, குலசேகரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து குலசேகரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai